சட்டு புட்டுன்னு ஓவரை முடிக்க மாட்டீங்களா? – ஸ்மித்துக்கு அபராதம் போட்ட ஐபிஎல்

WebDunia October 7th, 2020 04:00

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவிய நிலையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலாவதாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்த நிலையில், சேஸ் செய்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18வது ஓவரில் 136 ரன்களே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்து வீசியபோது குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டத்தை முடிக்காமல் நேரத்தை வீணடித்ததாக ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏற்கனவே போட்டியில் தோற்றதால் வருத்தத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இது மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Disclaimer: The views, thoughts and opinions expressed in the article belong solely to the author and not to RozBuzz.

rozbuzz Powered by RozBuzz
view source

Hot Comments

Recent Comments