டெல்லியில் இன்று மேலும் 2,726 பேருக்கு கொரோனா பாதிப்பு

Dina Seithigal October 8th, 2020 10:45

புதுடெல்லி:

இந்தியாவில கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 67 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் இன்று மேலும் 2,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,833 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,616 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று 2,643 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Disclaimer: The views, thoughts and opinions expressed in the article belong solely to the author and not to RozBuzz.

rozbuzz Powered by RozBuzz
view source

Hot Comments

Recent Comments